வழமைக்கு மாறான போக்குவரத்து நெரிசல்!!

வழமைக்கு மாறான போக்குவரத்து நெரிசல்!!

இன்று செவ்வாய்க்கிழமை காலை இல் து பிரான்சுக்குள் வழமைக்கு மாறான போக்குவரத்து நெரிசல் பதிவானது.

வீதி போக்குவரத்து கண்காணிப்பாளர்களாம Sytadin வெளியிட்ட தகவல்களின் படி, இன்று காலை 9 மணி அளவில் 605 கிலோமீற்றர் தூரம் போக்குவரத்து நெரிசல் பதிவானது. இது ஒரு 'விதிவிலக்கான' போக்குவரத்து நெரிசல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் இல் து பிரான்சுக்குள் நிலவும் மோசமான காலநிலை காரணமாகவே இந்த போக்குவரத்து நெரிசல் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, N406 நெடுஞ்சாலையில் காலை 7.15 மணிக்கு இரு மகிழுந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளமையும், இதனால் போக்குவரத்து தடையும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

ஆசிரியர் - Editor II