பலத்த மழை காரணமாக இரு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!

பலத்த மழை காரணமாக இரு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!

இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல், பலத்த மழை பொழியும் என இரு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Météo France வெளியிட்ட தகவல்களின் படி, Hérault மற்றும் Gard ஆகிய இரு மாவட்டங்களிலும் புயலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டு, இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இவ்விரு மாவட்டங்களில் பலத்த மின்னல் தாக்குதல்களும் இடம்பெறும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 80 இல் இருந்து 100 கி.மீ வேகம் வரை புயல் வீசும் எனவும், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும் படியும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். 

ஆசிரியர் - Editor II