3 நாட்களாக உயர்ந்த கொரோனா பாதிப்பு.. 8 நகரங்களில் இரவு ஊரடங்கு அறிவிப்பு!!

3 நாட்களாக உயர்ந்த கொரோனா பாதிப்பு.. 8 நகரங்களில் இரவு ஊரடங்கு அறிவிப்பு!!

இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்தப்போது அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று குஜராத். அதன்பின்னர் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன.

ஆனால் தற்போது தொற்று அதிகரித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் மீண்டும் ஊரடங்கை கொண்டுவந்த குஜராத் மாநில அரசு முடிவெடுத்து அறிவித்துள்ளது. குஜராத்தில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வதோதரா, காந்திநகர், சூரத், ராஜ்கோட் உள்ளிட்ட 8 நகரங்களில் வரும் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது.  

குஜராத்தில் கடந்த  3 தினங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. 

 அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்றில் இருந்து 14 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 165- ஆக உயர்ந்துள்ளது. 

ஆசிரியர் - Editor II