இலங்கை மனித உரிமைகள் விவகாரம்! ஜப்பான் அரசின் நிலைப்பாடு

இலங்கை மனித உரிமைகள் விவகாரம்! ஜப்பான் அரசின் நிலைப்பாடு

மனித உரிமைகள் பிரச்சனையில் இலங்கையில் முன்னேற்றத்திற்கு இன்னும் இடம் இருப்பதாக ஜப்பான் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயங்களிலும் இலங்கை தொடர்ந்து தன்னார்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம் என்று ஜப்பானிய அரசாங்கம் கூறியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில், தேசிய நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் ஆகிய துறைகளில் முன்னேற்றத்திற்கு இடமுண்டு.

விசாரணை மற்றும் இழப்பீடு செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான ஜப்பானின் நிரந்தர தூதர் கென் ஒகனிவா தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில், நேற்று நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 48 வது அமர்வின் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor II