சிகிச்சைகளுக்காக வெளிநாடு சென்றுள்ள துமிந்த சில்வா

சிகிச்சைகளுக்காக வெளிநாடு சென்றுள்ள துமிந்த சில்வா

ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவரது தலையில் துப்பாக்கிச் சூட்டுக்காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த சத்திரசிகிச்சை உடன் தொடர்புடைய சிகிச்சைகளைப் பெற வேண்டியுள்ளதால் அவர் சிங்கப்பூர் சென்று உள்ளதாக தெரியவருகின்றது.

எனினும் சில வருடங்கள் சிறையில் இருந்ததால் ஓய்வு எடுக்கும் நோக்கில் சில்வா சிங்கப்பூர் சென்று உள்ளதாக தெரியவருகின்றது.

துமிந்த சில்வா தற்போது தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II