லொஹான் ரத்வத்தவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் – கூட்டமைப்பு

லொஹான் ரத்வத்தவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் – கூட்டமைப்பு

தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைகளுக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் இரண்டு கைதிகளை மண்டியிடச் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறைச்சாலைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சரை உடன் பதவி நீக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் சிறையில் கைதிகளை கொலை செய்வதாக மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட்டு அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஆசிரியர் - Editor II