நீட் தேர்வு பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை!!

நீட் தேர்வு பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை!!

தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் ஏற்கனவே இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் மற்றொரு மாணவி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் நீட் நுழைவு தேர்வு நடந்து முடிந்த நிலையில் மாணவர்கள் தனுஷ் மற்றும் கனிமொழி ஆகியோர் தற்கொலை செய்துக் கொண்டு இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நீட் தேர்வு எழுதிய சௌந்தர்யா என்ற மாணவி மதிப்பெண் குறையும் என்ற பயத்தில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர் - Editor II