''இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்'' படத்தின் ட்ரைலர்!

''இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்'' படத்தின் ட்ரைலர்!
ஜோக்கர் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான ரம்யா பாண்டியன் டம்மி டப்பாசு என்ற படத்தில் பலராலும் அறியப்படாத கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். 
அதையடுத்து சமுத்திரக்கனியின் ஆண் தேவதை படத்தில் நடித்தார்.
இது எல்லாவற்றையும் விட அவரை பிரபலமாக்கியது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அதையடுத்து இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். 
இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சூர்யா - ஜோதிகா தான் இப்படத்தின் தயாரிப்பளர்கள். சிவ­கங்கை அருகே உள்ள, அதிக வச­தி­கள் இல்­லாத கிரா­மத்­தில்­தான் முக்­கிய காட்­சி­க­ளைப் பட­மாக்கியுள்ள படத்தின் கதையே கருப்பன் , வெள்ளையன் என இரண்டு காளைகளை முக்கிய கருவாக கொண்டு தான் நகர்கிறது. ஒரு கட்டத்தில் அந்த இரண்டு காளைகளும் காணாமல் போக ஒட்­டு­மொத்த ஊடக உல­கை­யும் திரும்­பிப் பார்க்க வைக்­கிறது அந்த குக்கிராமம் தற்போது இந்த இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=ZxeKuh_R0z8&t=5s

ஆசிரியர் - Editor II