அவசர இலக்கத்துக்கு 2500 அழைப்புகள் எடுத்த ஒருவர் கைது!

அவசர இலக்கத்துக்கு 2500 அழைப்புகள் எடுத்த ஒருவர் கைது!

“17” எனும் அவசர இலக்கத்துக்கு கிட்டத்தட்ட்ட 2500 அழைப்புகள் எடுத்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இக்கைது சம்பவம் Sartrouville (Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்கு வசிக்கும் 51 வயதுடைய ஒருவர், கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதியில் இருந்து 12 திகதிக்குட்பட்ட இரவில் 480 தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளார். இவ்வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரை 2500 அழைப்புகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

Val d'Oise மற்றும் Yvelines மாவட்டங்களைச் சேர்ந்த அவசரப்பிரிவுகளுக்கு இந்த அழைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்புகளை அடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த நபர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் மூன்று வெவ்வேறு இலக்கங்களை கொண்ட தொலைபேசி அவரிடம் இருந்ததாகவும், மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த நபர் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் உளநல சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர் - Editor II