பாடசாலைக்கான போக்குவரத்து! - மகிழுந்து முதலிடம்!!

பாடசாலைக்கான போக்குவரத்து! - மகிழுந்து முதலிடம்!!

மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்குரிய போக்குவரத்து சேவைகளில் மகிழுந்து தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் பாடசாலைகளுக்காக தினமும் 26 மில்லியன் பயணங்கள் இடம்பெறுவதாகவும், அதில் பிரதானமாக 31% வீதம் மகிழுந்தே பயன்படுகின்றது எனவும் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர், 28% வீதமானவர்கள் நடந்து செல்வதாகவும், அதன் பின்னரே (18% வீதம்) பாடசாலை பேருந்து பயணம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதில் தனியார் மகிழுந்துகள் பயன்பாடு (31%) கடந்த வருடத்தில் இருந்து அதிகரித்துள்ளதாகவும், கடந்த 2020 ஆம் ஆண்டில் 28% வீதமானவர்கள் மகிழுந்தை பயன்படுத்தியிருந்ததாகவும், இம்முறை +3% வீதத்தால் அதிகரித்து இந்த 31% வீதம் எனும் அதிகரிப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பிரான்சில் 39% வீதமான மாணவர்களுக்கான பாடசாலைகள் 2 கிலோமீற்றருக்கும் குறைவான தூரத்தில் இருப்பதாகவும், 25% வீதமான மாணவர்களது பாடசாலைகள் 2 இல் இருந்து 5 கிலோமீற்றருக்குள் உள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

*அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் இது தெரியவந்துள்ளது.  

ஆசிரியர் - Editor II