விசேட செய்தி : Gard மாவட்டத்தில் இன்று பாடசாலைகள் மூடப்படுகின்றன!

விசேட செய்தி : Gard மாவட்டத்தில் இன்று பாடசாலைகள் மூடப்படுகின்றன!

Gard மாவட்டத்தில் உள்ள அனைத்து பாட்சாலைகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை Saint-Dionizy (Gard) நகரில் வரலாற்றில் இல்லாத அதிகபட்ச மழை பதிவாகியிருந்தது. மூன்று மணிநேரங்களில் 244 மில்லி லீட்டர் மழை கொட்டி தீர்த்திருந்தது என Météo France அறிவித்துள்ளது.

அதேவேளை, நேற்றைய இரவு மொத்தமாக 13 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பல மாவட்டங்களில் அடை மழை பெய்து வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதையடுத்து Gard மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த வெள்ளத்தில் இருவர் காணாமல் போயுள்ளனர். தீயணைப்பு படையினர் அயராமல் முயற்சி செய்து ஒருவரை மீட்டுள்ளனர். மேலும் ஒருவர் *இன்று காலை வரை தேடப்பட்டு வருகின்றார்.

Vergèze, Clarensac மற்றும் Gallargues-le-Montueux போன்ற சிறு நகரங்களில் கிட்டத்தட்ட 3000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டது.

***************

அதேவேளை, l'état de catastrophe naturelle (தேசிய பேரிடர்) வரும் வாரத்தில் பிரகடணப்படுத்தப்படும் என Gard மாவட்டத்துக்கு நேரில் சென்றிருந்த உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்துள்ளார்.  

ஆசிரியர் - Editor II