பரீட்சாத்திகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படட்டுள்ளதாக தகவல்!

பரீட்சாத்திகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படட்டுள்ளதாக தகவல்!

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 2 ஆயிரத்து 922 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற 6 ஆயிரத்து 589 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இரண்டு பரீட்சைகளுக்குமான விண்ணப்ப முடிவுத்திகதி செப்டம்பர் 15ஆம் திகதி (நேற்று) என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை அதிபர்கள் மூலம் கல்வி அமைச்சிற்கு அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது சம்பள முரண்பாடுகள் காரணமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள முதன்மை தொழிற்சங்கங்கள் உயர்தர மாணவர்களின் விண்ணப்பங்களை அங்கீகரிக்கப் போவதில்லை என அறிவித்திருந்தன.

ஆசிரியர் - Editor II