பாடசாலை பேருந்து விபத்து! - பல மாணவர்கள் காயம்!

பாடசாலை பேருந்து விபத்து! - பல மாணவர்கள் காயம்!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் வடமேற்கு பிராந்தியமான Changé (Mayenne) நகரில் இடம்பெற்றுள்ளது. இன்று செப்டம்பர் 16 ஆம் திகதி, காலை 8.30 மணி அளவில் உள்ளூர் உயர்கல்வி பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று பயணித்தது. அதில் 49 பேர் இருந்துள்ளனர்.

பின்னர் சில நிமிடங்களில் குறித்த பேருந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குரிய காரணம் எதுவும் தற்போது தெரிவிக்கப்படவில்லை. இந்த விபத்தில் 15 மாணவர்கள் வரை காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

மாணவர்களை மீட்கும் பணியை மருத்துவ குழுவினருடன் இணைந்து தீயணைப்பு படையினரும் மேற்கொண்டனர்.

பேருந்து சாரதி உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.  


ஆசிரியர் - Editor II