ஜனாதிபதி மக்ரோன் ஆரம்பித்து வைத்த புதிய TGV தொடருந்து!

ஜனாதிபதி மக்ரோன் ஆரம்பித்து வைத்த புதிய TGV தொடருந்து!
இன்று வெள்ளிக்கிழமை TGV தொடருந்து தனது 40 ஆவது ஆண்டினை நிறைவு செய்துள்ளது. இந்த கொண்டாட்டமான தருணத்தில் அதி நவீன TGV தொடருந்து ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இந்த புதிய தொடருந்தினை அறிமுகப்படுத்தி வைத்தார். ‘TGV M ‘ எனும் இந்த புதிய தொடருந்து தற்போது உள்ள TGVகளை விடவும் அதிவேகமானது எனவும், 20% வீதம் ஆற்றல் சேமிக்கக்கூடிய திறனும் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பரிசின் கார் து லியோன் (Gare de Lyon) தொடருந்து நிலையத்தில் வைத்து இந்த புதிய தொடருந்தை ஆரம்பித்து வைத்தர் ஜனாதிபதி மக்ரோன். 
ஆசிரியர் - Editor II