சுகாதார பாஸ் நீக்கப்படுமா? - ஜனாதிபதி பதில்!

சுகாதார பாஸ் நீக்கப்படுமா? - ஜனாதிபதி பதில்!

சுகாதார பாஸ் (Pass sanitaire)) நடைமுறைக்கும் , கட்டாய தடுப்பூசி நடைமுறைக்கு எதிராகவும் பல ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் இடம்பெற்று வரும் நிலையில், பலரால் எதிர்பார்க்கப்பட்டுள்ள ”சுகாதார பாஸ் நீக்கப்படுமா?” எனும் இந்த கேள்விக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பதிலளித்துள்ளார்.

“சில மாவட்டங்களில் சுகாதார நிலமைகளை கருத்தில் கொண்டு சுகாதார பாஸ் தளர்த்தப்படும்!” என மிக சுருக்கமாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஒவ்வொரு 100.000 பேருக்கும் 99 பேருக்கும் குறைவானவர்களுக்கு தொற்று ஏற்படும் பட்டத்தில் குறித்த மாவட்டத்தில் சுகாதார பாஸ் தளர்த்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

“நான்காம் தொற்று அலை எமக்கு பின்னால் இல்லை!” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இன்று வியாழக்கிழமை காலை Eure-et-Loir மாவட்டத்துக்கு பயணித்திருந்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அங்கு வைத்தே இதனை குறிப்பிட்டிருந்தார்.  

ஆசிரியர் - Editor II