ஒரு இலட்சத்து 13 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு நேற்று ஒரேநாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டது..

ஒரு இலட்சத்து 13 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு நேற்று ஒரேநாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டது..

நாட்டில் மேலும் ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 908 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் 1000 பேருக்கும் அதன் இரண்டாவது டோஸ் 38 ஆயிரத்து 637 பேருக்கும் செலுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 26 ஆயிரத்து 909 பேருக்கும் அதன் இரண்டாவது டோஸ் 44 ஆயிரத்து 365 பேருக்கும் வழங்கப்பட்டது.

பைசர் முதல் டோஸ் 1388 பேருக்கும் டோஸ் 1083 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ள அதேவேளை மொடர்னா தடுப்பூசியின் முதல் டோஸ் 181 பேருக்கும், இரண்டாவது டோஸ் 345 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II