பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பினார்...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பினார்...

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக் குழுவினர் மீண்டும் இலங்கையை இன்று (20) காலை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஜி20 சர்வமத மற்றும் கலாசார மாநாடு – 2021 இற்காக, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத் உள்ளிட்ட தூதுக் குழுவினர் பிரதமருடன் இத்தாலிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II