இளைஞனை தாக்கி கைது செய்த காவல்துறை! - விசாரணை ஆரம்பம்!

இளைஞனை தாக்கி கைது செய்த காவல்துறை! - விசாரணை ஆரம்பம்!

சமூகவலைத்தளங்களில் பரவிய ஒரு காணொளியை அடுத்து, காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளைஞன் ஒருவன் கைது செய்யப்படும் போது அவனை கீழே விழுத்தி தாக்கி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் Seine-Saint-Denis மாவட்டத்தின் Noisy-le-Grand நகரில் இடம்பெற்றுள்ளது. இரு காவல்துறை அதிகாரிகள், இளைஞன் ஒருவனை மடக்கிப் பிடித்து தரையில் வைத்துக்கொண்டு அவனிடம் சில கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்கும் போது, மூன்றாவதாக அங்கு வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் குறித்த இளைஞனை தாக்கியுள்ளார்.

தலையில் காலால் உதைத்து அவரை மோசமாக தாக்கும் அச்சம்பவம் அருகில் உள்ள வீடு ஒன்றின் மாடியில் வைத்து காணொளியாக பதிவு செய்யப்பட்டது.

பின்னர் அந்த காணொளி சமூகவலைத்தளத்தில் பரவ ஆரம்பித்துள்ளது. காவல்துறையினரின் இந்த வன்முறைச் சம்பவத்தை அடுத்து, இது தொடர்பாக 'நிர்வாக குற்றவியல்' விசாரணைகளை பரிஸ் காவல்துறை தலைமையகம் ஆரம்பித்துள்ளது.

ஆசிரியர் - Editor II