காபுலில் இருந்து வெளியேற்றப்பட்ட 16 பிரெஞ்சு குடும்பத்தினர் !

காபுலில் இருந்து வெளியேற்றப்பட்ட 16 பிரெஞ்சு குடும்பத்தினர் !
காபுலில் இருந்து 16 பிரெஞ்சு குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 19 ஆம் திகதி காபுலில் இருந்து விமானம் புறப்பட்டு, கத்தார் நோக்கி சென்றதாக அமைச்சர் Jean-Yves Le Drian தெரிவித்தார். "16 பிரெஞ்சு குடும்பங்கள் இன்று (*நேற்று) ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியுள்ளனர்!" என தெரிவித்தார்.
இந்த 16 குடும்பத்தினரும் விரைவில் பரிசுக்கு அழைத்துவரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட உள்ளது. 
ஆசிரியர் - Editor II