கொரோனாத் தொற்று விழ்ச்சி - தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்!!

கொரோனாத் தொற்று விழ்ச்சி - தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்!!
பிரான்சில் கொரோனத் தொற்று நாளாந்தம் வீழ்ச்சியடைந்து வருவதாலும், வைத்தியசாலைகளில் ,கொரோனாத் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைவதாலும், சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியும் என பிரான்சின் சுகாதார அமைச்சர், ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.
«நாட்டில் தொற்றுக்கள் குறைந்த பகுதிகளிற்கு முதற்கட்டமாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி,  பின்னர் நாடு முழுவதும் தளர்த்தும் திட்டம் உள்ளது. தற்போது வீழ்ச்சியடைந்து வரும் கொரோனத் தொற்று வீழ்ச்சி,  தொடர்ந்தால் பிரெஞ்சு மக்கள் இலகுவாகச் சுவாசிக்கும் வழிவகைளை நாம் செய்வோம்.

நாம் கொரோனத் தொற்றலையில் இருந்து மீண்டு விட்டோம் என நம்புகின்றோம். சகாதார அனுமதிப் பத்திரமான pass sanitaire  இனைத் தளர்த்தும் திட்டமும் உள்ளது. ஆனால் இந்த மாத இறுதிக்குள் இது சாத்தியமில்லை எனவே நம்புகின்றோம்»
என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் - Editor II