குற்றாலம் அருவி சுற்றுலா பயணிகளுக்கு திறப்பு!

குற்றாலம் அருவி சுற்றுலா பயணிகளுக்கு திறப்பு!

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த குற்றாலம் அருவி தற்போது சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலா தளங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது பல சுற்றுலா தளங்கள் மெல்ல திறக்கப்பட்டு வரும் நிலையில் கோவை மாவட்டம் குற்றாலம் அருவியிலும் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் குற்றாலம் அருவிக்கு வருபவர்கள் அதற்கு முன்னதாக coimbatorewilderness.com என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோவை மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது.

ஆசிரியர் - Editor II