தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் பிரவேசிக்க தடை!

தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் பிரவேசிக்க தடை!

தடுப்பூசி போடாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் செல்ல அனுமதி வழங்கப்படாது என ஆமதாபாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதன்படி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை தொலைப்பேசியிலோ அல்லது பேப்பர் வடிவிலோ வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் பிரவேசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த முடிவை பொதுமக்கள் பலரும் அங்கீகரித்துள்ளனர்.

ஆசிரியர் - Editor II