இளையராஜா ஸ்டூடியோவுக்கு கமல் ஹாசனின் சர்ப்ரைஸ் விசிட்!;-படங்கள் இணைப்பு

இளையராஜா ஸ்டூடியோவுக்கு கமல் ஹாசனின் சர்ப்ரைஸ் விசிட்!;-படங்கள் இணைப்பு
இளையராஜாவின் ஸ்டூடியோவில் இருந்த தங்களது கறுப்பு-வெள்ளை ஆல்பத்தைப் பார்த்து பழைய நினைவுகளை அசைப்போட்டார் கமல்.
உலகநாயகன் கமல் ஹாசன் மற்றும் இசைஞானி இளையராஜாவின் காம்போ ரசிகர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் பெரும் விருந்து படைப்பவை.
பல வருடங்களாக இவர்கள் இருவரும் நட்புடன் பழகி வருகிறார்கள்.
இளையராஜாவை தனது சகோதரர் என பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார் கமல்.
இந்நிலையில் இன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு வருகை தந்தார் கமல்.
 இளையராஜாவை தனது சகோதரர் என பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார் கமல்.
 இந்நிலையில் இன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு வருகை தந்தார் கமல்.

அங்கு அவர்கள் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டதன் படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அதோடு இளையராஜாவின் ஸ்டூடியோவில் இருந்த தங்களது கறுப்பு-வெள்ளை ஆல்பத்தைப் பார்த்து பழைய நினைவுகளை அசைப்போட்டார் கமல்.
இவர்கள் இருவரும் எப்போது மீண்டும் இணைவார்கள் என்பதை அறிய ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

ஆசிரியர் - Editor II