கொரோனா தடுப்பு பணிக்காக நிதி! – முதல்வரை சந்தித்து வழங்கிய உதயநிதி!

கொரோனா தடுப்பு பணிக்காக நிதி! – முதல்வரை சந்தித்து வழங்கிய உதயநிதி!

தமிழகத்தில் கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நிதி அளித்தார் உதயநிதி ஸ்டாலின்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும், வேகவேகமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக அப்போதே முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள், தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் நிதியளித்து வந்தனர்.

தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளன. எனினும் மூன்றாம் அலை பாதிப்பு குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அவரிடம் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.20.43 லட்சம் வழங்கியுள்ளார் .

ஆசிரியர் - Editor II