கத்திக்குத்து தாக்குதலில், 16 வயதுடைய சிறுவன் பலி

கத்திக்குத்து தாக்குதலில், 16 வயதுடைய சிறுவன் பலி

93 ஆம் மாவட்டத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில், 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்.

நேற்று திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் Les Lilas நகரில் இடம்பெற்றுள்ளது. இரவு எட்டு மணி அளவில் குறித்த பதின்ம வயதுடைய சிறுவன் மீது தாகுதல் இடம்பெற்றதாக கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர். சிறுவனின் நெஞ்சில் கத்திக்குத்து ஆழமாக இறங்கியதால், இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளான்.

இச்சம்பவத்தில் தொடர்புடையதாக 17 வயதுடைய இளைஞன் ஒருவன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளான். உடற்கூறு விசாரணைகளின் பின்னர், விசாரணைகள் தொடரும் என அறிய முடிகிறது.  ஆசிரியர் - Editor II