காவல்துறையினர் மீது தாக்குதல்! - துப்பாக்கிச்சூடு!

காவல்துறையினர் மீது தாக்குதல்! - துப்பாக்கிச்சூடு!

காவல்துறையினர் மீது சாரதி ஒருவன் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

93 ஆம் மாவட்டத்தின் La Courneuve நகரில் இடம்பெற்றுள்ளது. நேற்று திங்கட்கிழமை மாலை 7 மணிக்கு வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர், மகிழுந்து ஒன்றை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

ஆனால் சாரதி மகிழுந்தை நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்துள்ளார். இதனால் மகிழுந்தை துரத்தி பிடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.. இரு மோட்டார்சைக்கிள்களில் குறித்த மகிழுந்தை துரத்திச் சென்றனர்.

அதிவேகமாக பயணித்த மகிழுந்து, Drancy இனை கடந்தது. இப்போது குறித்த மகிழுந்து அங்குள்ள சுவர் ஒன்றில் மோதி, திடீரென பின்னால் வந்தது. பின்னால் வந்த அதிகாரிகளின் மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதி தள்ளியது.

பின்னர் மகிழுந்து தப்பிச் செல்ல முயல, இப்போது உடன் வந்த அதிகாரி மகிழுந்து சாரதி மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் சாரதி படுகாயமடைந்தான். பின்னர் அவன் காவல்துறையினரின் கண்காணிப்பின் கீழ் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டான்.

இச்சம்பவம் தொடர்பில், காவல்துறையினருக்கான காவல்துறையான IGPN அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  

ஆசிரியர் - Editor II