வவுனியா மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

வவுனியா மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

வவுனியா மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாடு பூராகவும் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று அதிகரித்து வரும் நிலையில் 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

அதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.

அதற்கமைவாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்பட்டது. இதில் பலரும் ஆர்வத்துடன் வருகை தந்து சுகாதார நடைமுறைகளைபர் பின்பற்றி தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டனர்.

ஆசிரியர் - Editor II