இலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் வழங்கப்பட்ட அங்கீகாரம்

இலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் வழங்கப்பட்ட அங்கீகாரம்

பிரபல பாடகி யோஹானி டி சில்வாவை, இந்திய – இலங்கை புதிய கலாசாரத் தூதுவராக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் பெயரிட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக, இந்த தகவலை வெளியிட்டுள்ளது

மூன்று மாத குறுகிய காலத்தினுள் முழு உலகையும்  மெனிகே மகேஹிதே'பாடல்  மூலம்  கவர்ந்த இலங்கை இளம் பாடகி YOHANI THE SILVA இலங்கை இந்திய கலாசார தூதுவராக நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் இந்தியத் தூதுவராலயம் இவருக்கு இந்த அந்தஸ்தை வழங்கி கெளரவித்துள்ளது.
YOHANI யை வெகுவாகப் பாராட்டியுள்ள இந்திய தூதரகம் மெனிகே மகேஹிதே'பாடல் இவரது பாடல் இந்தியாவின்  மூலை முடுக்கெங்கும் ஒலிப்பதாகவும் பிரபலங்கள் இப்பாடலை இரசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன் இலங்கை- இந்திய கலாசார பாரம்பரிய உறவுகளுக்கு இவரது பாடல் பிரவேசம்மீள் பிரவேசத்தை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவரது பாடல் Youtube தளத்தில் 117 மில்லியன் Views ஐ தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II