இந்தியா போர் சூழலை சந்தித்து வருகிறது – ராகுல் காந்தி

இந்தியா போர் சூழலை சந்தித்து வருகிறது – ராகுல் காந்தி

இந்தியா தனது எல்லைப் பகுதிகளில் போர் சூழலை சந்தித்து வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

லடாக் உத்தரகண்ட், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் சீனா 10 புதிய இராணுவ தளங்களை அமைத்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ள அவர், நமது எல்லைப் பகுதிகளில் போர்ச்சூழலை நாம் சந்தித்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

பாங்காங் ஏரி பகுதியில் ஏற்பட்ட மோதல் நிலையை தொடர்ந்து எல்லைகளில் படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II