திரைப்பட குழுவினர் மீது தாக்குதல்! - மூவர் கைது!

திரைப்பட குழுவினர் மீது தாக்குதல்! - மூவர் கைது!

திரைப்பட காட்சிகள் படமாக்கிக்கொண்டிருந்த குழு ஒன்றின் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் புதன்கிழமை Essonne மாவட்டத்தில் உள்ள massy இஸ்லாமிய பள்ளிவாசல் அருகே இந்த படப்பிடிப்பு இடம்பெற்றுக்கொண்டிருந்தது. பகல் 12.30 மணி அளவில் திடீரென உள் நுழைந்த சில நபர்கள் படம்பிடித்துக்கொண்டிருந்த குழுவினரை கண்மூடித்தனமாக தாக்க தொடங்கினார்கள்.

உடனடியாக காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். படப்பிடிப்பு செய்வதற்கு அவர்களிடம் அனுமதி பத்திரம் இருந்ததாகவும், ‘அமேசான் பிரைம்’ தயாரிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களில் சில அங்கிருந்து தப்பி ஓடியுள்ள போதும், மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த தாக்குதலில் ஒளிப்பதிவாளர் பலமுறை தாக்கப்பட்டதாகவும், அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், சில படப்பிடிப்பு பொருட்களும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆசிரியர் - Editor II