பிரான்சை குற்றம் சாடிய மாலி பிரதமர்! - ஜனாதிபதி மக்ரோன் பதிலடி!!

பிரான்சை குற்றம் சாடிய மாலி பிரதமர்! - ஜனாதிபதி மக்ரோன் பதிலடி!!

மாலி நாட்டு பிரதமர் பிரெஞ்சு ஜனாதிபதி வைத்த குற்றச்சாட்டுக்கு ஜனாதிபதி மக்ரோன் பதிலளித்துள்ளார்.

‘பிரான்ஸ் துரோக இழைத்து விட்டது. நடுவழியில் எங்களை கைவிட்டுள்ளது!’ என மாலி நாட்டு பிரதமர் Choguel Kokalla Maïga, ‘ஐரோப்பிய ஒன்றிய’ அரங்கில் வைத்து கடுமையாக விமர்ச்சித்திருந்தார். மாலி நாட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இடம்பெற்று வரும் யுத்தத்தில் பிரான்ஸ் தனது துருப்புக்களுடன் களத்தில் போராடி வருகின்றது. கடந்த சில வருடங்களாக இடம்பெற்று வரும் இந்த யுத்தம் முடிவுக்கு வராததால், பிரான்ஸ் தனது துருப்புக்களை மீள அழைக்கும் முடிவை எடுத்துள்ளது.

அதை அடுத்தே மாலி நாட்டு பிரதமர் மேற்படி குற்றச்சாட்டை வெளியிட்டார். பின்னர் இதற்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பதில் அளிக்கும் போது, “நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன். இந்த வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது. *நேற்று தான் Maxime Blasco (மாலி நாட்டு யுத்தத்தில் கொல்லப்பட்ட பிரெஞ்சு வீரர்) இன் தேசிய அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதற்கிடையில் இப்படி ஒரு விமர்சனம் வைப்பது ஒரு அவமானம் ஆகும். ஒரு அரசாங்கம் வெளியிடும் கருத்தும் இல்லை!” என மக்ரோன் கடுமையாக சாடியுள்ளார்.  

ஆசிரியர் - Editor II