உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரம்!

உத்தரகாண்ட்- திரிசூல சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, இந்திய கடற்படை வீரா்கள் 6 போ் காணாமல்போயுள்ளனர்.

திரிசூல சிகரத்தில், இந்திய கடற்படையைச் சோந்த 10 பேர் கொண்ட குழு, மலையேற்றத்தில் ஈடுபட்டது.

கடந்த செப்டம்பர் 3 ஆம்  திகதி மும்பையில் இருந்து புறப்பட்ட குறித்த குழு, நேற்று (வெள்ளிக்கிழமை) திரிசூல மலையில் ஏற முற்பட்டனர். இதன்போது எதிர்பாராதவிதமாக பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்திய இராணுவம், இந்திய விமானப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை உதவியுடன், தேடுதல் பணியை  முன்னெடுத்தது.

இந்த பனிச்சரிவில் சிக்கிய 5 வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.  ஏனைய 6 வீரர்களும் மலையேற்றும் உதவியாளரும் நேற்று காலை முதல் காணாமல்போயுள்ளனர்.

இந்நிலையில் காணாமல்போயுள்ள அவர்களை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர் - Editor II