நடுக்கடலில் போதை: ஷாருக் மகன் ஆரியன் கான் கைது

நடுக்கடலில் போதை: ஷாருக் மகன் ஆரியன் கான் கைது
போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்.
இந்தியாவின் முதல் உல்லாசக் கப்பல் என்ற பெருமையுடன் எம்பிரஸ் தனது பயணத்தை தொடங்கியது. இந்த கப்பலில் போதை பார்ட்டி நடைபெற இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை இறங்கினர்
சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த சோதனையின் முடிவில் டை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 13 பேரில் பிரபல பாலிவுட் நடிகர் மகனும் ஒருவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் அந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் எனவும் அவரது மகன் ஆர்யன் கான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. 
இதனைத்தொடர்ந்து தற்போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஷாருக்கான் மகனுடன் மேலும் 13 பேரையும் பிடித்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளனர்.


ஆசிரியர் - Editor II