நகைக்கடையில் கொள்ளை! €100,000 மதிப்புள்ள நகைகள் மாயம்!

நகைக்கடையில் கொள்ளை! €100,000 மதிப்புள்ள நகைகள் மாயம்!

பரிசில் உள்ள நகைக்கடை ஒன்றில் இருந்து €100,000 மதிப்பினான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

பரிஸ் 8 ஆம் வட்டாரத்தின் Place de la Madeleine பகுதியில் உள்ள “Marthan Lorand” நகைக்கடையே கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை நள்ளிரவு கடைக்குள் நுழைந்த கொள்ளையன் ஒருவன் நகைகளை வாரி சுருட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். திருடப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு €100,000 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நகைக்கடை அமைந்துள்ள கட்டிடத்தில் திருத்தப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. அதை சாதமாக பயன்படுத்தியே கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாகவும், கொள்ளையன் தப்பிச் சென்ற நிலையில், அவனை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.  

ஆசிரியர் - Editor II