வடிவேலு ரி எண்ட்ரி படத்தில் யாரெல்லாம் இருப்பார்கள் தெரியுமா?

வடிவேலு ரி எண்ட்ரி படத்தில் யாரெல்லாம் இருப்பார்கள் தெரியுமா?

வடிவேலு சீக்கிரமே தனது ரி எண்ட்ரி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சுராஜ் இயக்க உள்ளார்.

வடிவேலுவின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. இந்த படத்தில் நடிக்க வடிவேலு தயங்கிய போது அவருக்கு நம்பிக்கை அளித்து நடிக்க வைத்தவர் அந்த படத்தின் தயாரிப்பாளரான ஷங்கர். இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் அந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிய போது மீண்டும் அதே கூட்டணி இணைந்தது. 

ஆனால் பட உருவாக்கத்தின் போது ஷங்கருக்கும் வடிவேலுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதையடுத்து அந்த படம் கைவிடப்பட்டது. இதனால் ஷங்கரைப் பற்றி வடிவேலு பல இடங்களில் விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டு இருந்த ரெட் நீக்கப்பட்டு பிரச்சனை எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்துக்கான திரைக்கதை விவாதங்கள் இப்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் வழக்கமாக வடிவேலுவுடன் நடிக்கும் அவரின் நகைச்சுவை குழுவினரான மச்சக்காளை, போண்டா மணி மற்றும் வெங்கல ராவ் உள்ளிட்டோர் நடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஏனென்றால் 10 வருடங்களாக அவர் நடிக்காமல் இருந்த நிலையில் அவர்கள் எல்லாம் தங்கள் வழியைப் பார்த்து சென்றனர். இதனால் இப்போது அவர்களை எல்லாம் வடிவேலு சேர்த்துக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளத

ஆசிரியர் - Editor II