பிரியங்கா காந்தி மீது பொலிஸார் வழக்குப்பதிவு

பிரியங்கா காந்தி மீது பொலிஸார் வழக்குப்பதிவு

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம்- சித்தாபூர் மாவட்டத்திலுள்ள ஹர்கான் பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசின் எந்த உத்தரவும் குற்றப்பத்திரிக்கையும் இன்றி கடந்த 28 மணி நேரம் தன்னை  பொலிஸ் காவலில் வைத்துள்ளதாக பிரியங்கா காந்தி கூறியதை தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து பொலிஸ்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கு முன்னதாக, உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் 4 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

குறித்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திப்பதற்கு அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில் நேற்று (திங்கட்கிழமை) விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் சென்ற பிரியங்கா காந்தி, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II