விசேட தேவையுடைய 6,000 சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி

விசேட தேவையுடைய 6,000 சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி

12 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட சுமார் 6,000 விசேட தேவைகளைக் கொண்டவர்களுக்கு, பைசர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

மேலும், தடுப்பூசிகள் வழங்கப்பட்ட எந்த சிறுவர்களுக்கும் இதுவரையிலும் எந்தவிதமான சிக்கல் நிலை ஏற்படவில்லை என்று ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.

இதற்கு முன்னர், கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 25 சிறுவர்கள், நாளாந்தம் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 03 ஆக குறைவடைந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியர் - Editor II