வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என உள்துறை அமைச்சர் அறிவிப்பு!!

வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என உள்துறை அமைச்சர் அறிவிப்பு!!

மோசமான காலநிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு உள்துறை அமைச்சர் அறிவித்தல் விடுத்துள்ளார்.

‘மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்!’ என உள்துறை அமைச்சர் Gerald Darmanin அறிவித்துள்ளார். இன்று பகல் 1 மணியில் இருந்து Bouches-du-Rhône மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கையும், Marseille, Brignoles மற்றும் Var ஆகிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் அவதானமாக இருக்கும் படியும், ‘வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்!’ எனவும் உள்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

‘தீயணைப்பு படையினர், உதவிக்குழுவினர், இராணுவத்தினர் உதவிக்கு தயாராக இருப்பதாகவும், உலங்குவானூர்திகள் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, அனைத்து ஆபத்தான பகுதிகளும் சிறப்பு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  

ஆசிரியர் - Editor II