டன்வோர்த் அவெனியுவில் இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு தாங்களே பொறுப்பு என ISIS

டன்வோர்த் அவெனியுவில் இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு தாங்களே பொறுப்பு என ISIS

ஞாயிற்றுகிழமை டன்வோர்த் அவெனியுவில் இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு தாங்களே பொறுப்பு என ISIS கோரியுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் ஆதாரமற்ற இந்த கூற்றிற்கு சான்றுகள் அல்லது ஆதரவு எதனையும் அவர்கள் வழங்கவில்லை.

ISIS-ன் செய்தி ஏஜன்சியான AMAQ குறிப்பிட்ட துப்பாக்கிதாரி "இஸ்லாமிய அரசின் சிப்பாய்"எனவும் கூட்டணி நாடுகளின் பிரசைகளை இலக்கு வைத்து தாக்கும் பொறுப்பு உள்ளவர்கள் எனவும் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் புதன்கிழமை காலை வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

கடந்த செப்ரம்பரில் லாஸ் வெகாசில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்திற்கு AMAQ செய்தி நிறுவனம் ஊடாக உரிமை கோரியது. ஆனால் அமெரிக்க சட்ட அமுலாக்க அதிகாரிகள் குறிப்பிட்ட தாகுதலிற்கும் சர்வதேச பயங்கரவாதத்திற்கும் தொடர்பு இல்லை என திரும்ப திரும்ப மறுப்பு தெரிவித்ததாக அறியப்பட்டது.

ஞாயிற்றுகிழமை சம்பவம் தொடர்பான ISIS-கோரிக்கை குறித்து ரொறொன்ரோ பொலிசார் இன்னமும் எதுவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

மாகாணத்தின் பொலிஸ் கண்காணிப்பு பிரிவு சுட்ட நபர் 29-வயதுடைய வைசால் குசைன் என அடையாளம் கண்டுள்ளதாகவும் சம்பவத்திற்கான நோக்கம் தெளிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுட்டவர் கடுமையான மனநல சவால் மற்றும் மனநோய் கொண்டவர் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்ததாக திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

சம்பவம் குறித்து புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் சுடுவதற்கு பயன் படுத்தப்பட்ட அரை-தானியங்கி கைத்துப்பாக்கி குறித்தும் விசாரனை செய்து வருகின்றனர்.

ஞாயிற்றுகிழமை நடந்த கொடிய சம்பவத்தில் 18-வயதுடைய பெண் மற்றும் 10-வயதுடை சிறுமி இருவரும் கொல்லப்பட்டதுடன் 13-பேர்கள் காயமடைந்துள்ளனர்.ஆசிரியர் - Editor II