நீரில் மூழ்கி உயிருக்கு போராடிய சுவிஸ் இளைஞர்

நீரில் மூழ்கி உயிருக்கு போராடிய சுவிஸ் இளைஞர்

சுவிட்சர்லாந்தின் ஜூரா மாகாணத்தில் நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிருக்கு போராடிய சுவிஸ் இளைஞரை 27 மீற்றர் உயரத்தில் இருந்து குதித்து காப்பாற்றிய அமெரிக்கருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள ஜூரா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இங்குள்ள Saut-du-Doubs அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டு வந்த சுவிஸ் இளைஞர் ஒருவர் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தமது உயிரை துச்சமாக கருதி விபத்துக்குள்ளான நபரை காப்பாற்ற குதித்துள்ளார்.

இதனிடையே இந்த காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் உடனடியாக அவசர உதவிக்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து 3 ஹெலிகொப்டரில் விரைந்து வந்த மீட்பு குழுவினர் தண்ணீரில் தத்தளித்தபடி இருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

27 மீற்றர் உயரத்தில் இருந்து தடுமாறி விழுந்ததால் சுவிஸ் இளைஞரின் கை உடைந்துள்ளது.

இதனிடையே தண்னீரில் தத்தளித்த சுவிஸ் இளைஞரை காப்பாற்றிய நபர் அமெரிக்க முன்னாள் மீட்பு குழு உறுப்பினர் எனவும், கடலில் விபத்துக்குள்ளானவர்களை மீட்பதில் சிறப்பு பயிற்சி பெற்றவர் எனவும் தெரியவந்துள்ளது.


ஆசிரியர் - Editor II