பாகிஸ்தான் சிறையில் 471 இந்தியர்கள் - பாக். வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

பாகிஸ்தான் சிறையில் 471 இந்தியர்கள் - பாக். வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

பாகிஸ்தான் சிறைகளில் 418 மீனவர்கள் உள்பட 471 இந்தியர்கள் அடைக்கப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

பாகிஸ்தான் சிறையில் 471 இந்தியர்கள் - பாக். வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தான் சிறைகளில் 418 மீனவர்கள் உள்பட 471 இந்தியர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் கடல் மற்றும் நிலப்பகுதி எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்டவர்கள். இதேபோல் இந்திய சிறைகளில் 108 மீனவர்கள் உள்பட பாகிஸ்தானை சேர்ந்த 357 பேர் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.

2016-ம் ஆண்டு நல்லெண்ண அடிப்படையில் 31 மீனவர்கள் உள்பட 114 பாகிஸ்தான் கைதிகளை இந்தியா விடுவித்தது. அதேபோல் 941 மீனவர்கள் உள்பட 951 இந்திய கைதிகளை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது. சிறை கைதிகளுக்கான பாகிஸ்தான்- இந்தியா நீதித்துறை குழு 2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த குழு 2013-ம் ஆண்டுக்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
ஆசிரியர் - Editor II