இரானுவத் தளபதி மேஐர் ஜென்ரல் மகேஸ் சேனா நாயக்க யாழிற்கு விஐயம்

இரானுவத் தளபதி மேஐர் ஜென்ரல் மகேஸ் சேனா நாயக்க யாழிற்கு விஐயம்

இரானுவத் தளபதி மேஐர் ஜென்ரல் மகேஸ் சேனா நாயக்க  திடீர் விஐயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு நேற்று வந்திருத்தார்.

யாழிற்கு விஐயம் செய்திருந்த இராணுவத் தளபதி யாழ்ப்பாணக் கோட்டையில் சர்ச்சைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டு வருகின்ற படைமுகாமையும் பார்வையிட்டுள்ளதுடன் இராணவ அமிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.


அண்மைக்காலமாக யாழில் அதிகரித்து வருகின்ற  வன்முறைகள் தொடர்பில் படையினர் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றதொரு சூழலிலேயே இராணுவத்தளபதி யாழிற்கு விஐயம் செய்திருக்கின்றார்.

இதேவேளை கோட்டையில் தொல்லியல் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியில் படையினர் முகாம் அமைத்து வருவதற்கு பலத்த எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தி வருகின்றால் மாகாம் அமைப்பதில் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்ற நிலைமையியே தான் அவருடைய விஐயமும் அமைந்துள்ளது.

இதற்கமைய நேற்று யாழ் வந்திருந்த இரானுவத் தளபதி கோட்டைக்குச் சென்று கோட்டையையுப் அங்கு அமைக்க ப்படும் இராணுவ முகாமையும் சென்று பார்வையிட்டு அங்குள்ள இராணுவத்தினருடன் கலந்துரையாடியுள்ளார். 
அதனைத் தொடர்ந்து பல இடங்களுக்கு ம் சென்றிருந்த இராணுவத் தளபதி இதன் போது பலரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் நெரிவிக்கப்படுகின்றது.


ஆசிரியர் - Editor II