ஐஸ்வர்யாவின் ஆட்டத்திற்கு கிடைத்த தண்டனை! பிக்பாஸ் வீட்டிற்குள் டிடி மற்றும் ஆர்யா.

ஐஸ்வர்யாவின் ஆட்டத்திற்கு கிடைத்த தண்டனை! பிக்பாஸ் வீட்டிற்குள் டிடி மற்றும் ஆர்யா.

பிக்பாஸ் வீட்டில் ராணியாக வலம்வந்து தனது அராஜகத்தை சக போட்டியாளராகிய மக்களிடம் வெளிக்காட்டிய ஐஸ்வர்யாவின் நேற்றைய நிலை பரிதாபமாக மாறியது.

பொன்னம்பலம் ஐஸ்வர்யாவை கழுத்தில் கையை வைத்து அவரை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டார். அதன்பின்பு பிக்பாஸிடம் ஐஸ்வர்யாக விடாமல் கதறி அழுதார்.

அதற்கு பிக்பாஸ் என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் பொன்னம்பலத்தினை வீட்டை விட்டு தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரொமோவில் அதிரடியாக டிடி, ஆர்யா என உள்ளே நுழைந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா கையில் குளுக்கோஸ் ஏற்றியதற்காக நீடிலும் உள்ளது. இதிலிருந்து நேற்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.

ஆசிரியர் - Editor II