டாஸ்க் என்கிற பெயரில் நடக்கும் அரசியல் நாடகம்.

டாஸ்க் என்கிற பெயரில் நடக்கும் அரசியல் நாடகம்.

டாஸ்க் என்கிற பெயரில் தனது அரசியல் நாடகத்தை நிகழ்த்த கமல் திட்டமிட்டிருப்பதாக அவர் மீது பெண் வக்கீல் புகார் அளித்துள்ளார்.

ஐஸ்வரியாவை சர்வாதிகார பெண்ணாக நிலைநிறுத்தி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை இழிவுபடுத்துவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாடி பாலாஜியை மரியாதைக் குறைவாக அழைத்து, அவர் மீது வீட்டில் உள்ள குப்பைகளைக் கொட்டியது, இன்னும் 2 நாள் வச்சி செய்வேன் என்றது, சென்றாயனை நாய், லூஸு என்றெல்லாம் மரியாதை இல்லாமல் திட்டியது என அனைத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

கமல் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார் என்று சிலரும், இது கமலுக்கு தெரிந்தே ஸ்கிரிப்ட் செய்துதான் நடக்கிறது என்று சமூக வலைதளங்களில் வாத விவாதங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் லூயிசால் ரமேஷ் என்பவர் காவல் ஆணையரிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி மீதும் கமல் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார். அவரது புகாருக்கு ஏற்பு மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II