குமுறிய நித்யானந்தா: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

குமுறிய நித்யானந்தா: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆதின மடத்திற்குள் நித்யானந்தா செல்வதற்கு பொலிசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பெண்களுடன் உறவு கொண்டதாக சர்ச்சையில் சிக்கிய சாமியார் நித்யானந்தா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மதுரை ஆதீன மடத்தின் 293-வது ஆதீனமாக 292-வது ஆதீனம் அருணகிரிநாதரால் 2012-ல் நியமிக்கப்பட்டேன்.

தொடர்ந்து மடத்தில் ஆன்மீக பணிகளை செய்து வந்ததோடு, மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எனது சொந்த செலவில் அன்னதானம் வழங்கினேன்.

மடத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் செயல்படும் சிலர் மடத்துக்கு எதிராக பிரச்சினைகளை ஏற்படுத்தினர்.

இதையடுத்து என்னை ஆதீனமாக நியமனம் செய்ததை ரத்து செய்து விட்டதாக அருணகிரிநாதர் அறிவித்தார். என்னை நீக்குவதற்கு அருணகிரிநாதருக்கு எந்த அதிகாரமும் இல்லை.

நான் ஆதீனம் என்ற முறையில் மதுரை ஆதீனம் மடத்துக்குள் சென்று பூஜைகள் செய்வதற்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி கூறுகையில், நித்யானந்தா ஆதின மடத்திற்குள் செல்லும் போது தனி மனிதனாக செல்ல வேண்டும், கூட்டமாக செல்லக்கூடாது.

நித்யானந்தா இளைய ஆதினம் என்ற எண்ணம் இல்லாமல் இந்திய நாட்டின் குடிமகன் என்ற உரிமையில் மதுரை ஆதின மடத்திற்குள் செல்ல உரிய பாதுகாப்பை பொலிசார் வழங்க உத்தரவிட்டார்.


ஆசிரியர் - Editor II