இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் - ரஜினிகாந்த்

இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் - ரஜினிகாந்த்

காவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 

இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் - ரஜினிகாந்த்
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக இருந்தது. நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இன்று காலை முதல் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. பின்னர் மாலை 6.10 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி காலமானார்.


என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்.

அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்


இவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், ‘என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்’ என்று தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் - Editor II