தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் சத்தியாக்கிரக போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் சத்தியாக்கிரக போராட்டம்
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் வடக்கு கிழக்கு மகாணம் தவிர்ந்த ஏணையமாகாணங்களில் சத்தியாக்கிரக போராட்டம்
அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு. தம்பிராசர்

இவ் நல்லாட்சி அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் வடக்கு கிழக்கு மகாணம் தவிர்ந்த ஏணையமாகாணங்களில் பாரிய தொரு சத்தியாக்கிரக போராட்டத்தினை முண்ணெடுக்கவுள்ளதாக  அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு. தம்பிராசா தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்;.

ஆயதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு இன்றைக்கு ஒன்பது ஆண்டுகளை தாண்டிவிட்டது. ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரான காலப்பகுதியில் வடகிழக்கு மாணாகாணத்தில் எந்தவொரு ஆயுதம் தொடர்பான பிரச்சிணை வெளிக்கொணரப்படவில்லை. அப்படி ஒரு பிரச்சிணை ஏற்படவில்லை. ஆகவே வடகிழக்கு பிரதேசத்தினை விட்டு இராணுவம் வெளியேறவேண்டும் என்கின்ற கோரிக்கைக்கு வலுச்சேர்த்து இருக்கின்றது ஒன்பது வருடமாக வடகிழக்கில் ஏற்பட்டிருக்கின்ற அமைதி.
ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரான காலப்பகுதியில் தமிழ் சிங்கள மக்களிடையே நல்லிணக்கத்தை கட்டி எழுப்பபடவேண்டும் நல்லிணக்கம் கட்டி எழுப்பபட்டு இந்த பூமி ஒரு நிம்மதியான சூழலை சுதந்திரமான சூழல் அணைத்து மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்கின்ற சூழலை மகிந்த ராஜபக்ச அரசும் தவறவிட்டிருக்கின்றது நல்லாட்சி அரசும் தவற விட்டிருக்கின்றது. நல்லிணக்கம் கட்டி எழுப்பபடவேண்டுமாக இருந்தால் முதலாவதாக தமிழ் அரசியல் கைதிகள் அணைவரும் விடுதலை செய்யப்படவேண்டும். பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறி இருகின்றார். ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் எல்லாம் சாதரன கைதிகள் எனவும் தற்போது சிறைகளில் உள்ள கைதிகள் பாரிய குற்றங்களை செய்துதான் சிறை வைக்கப்பட்டு இருகின்றார்கள் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது என்று கூறி இருக்கின்றார். அப்படி பட்ட கைதிகள் சிறைவைக்கப்பட்டவர்களாக இருந்தால் பிறசிடன் கவுன்சில் சாளிய பீரிஸ் அவர்களினால், ஆமார் வீதி அம்மன் கோயில் பகுதியில் வைத்து கோத்தபாய அவர்களை குண்டு வைத்து கொலை செய்வதற்கு உதவியாக இருந்தார் என்று சந்தேகத்தில் பெயரில் பிடிபட்ட பிரவின் சிறிஸ்கந்தராஜா விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவருடைய பூ நூலை கூட அறுத்து, இந்து மதத்தினை அவமதித்து சிறைக்கைதியாக வைத்திருந்திருக்கிறார்கள் இன்று வரைக்கும். ஆனால் இன்று விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். ஆகவே பாரளுமன்ற உறுபு;பினர் சுமந்திரன் சொன்னது முற்றுமுழுதான பொய். சுமந்திரன் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் பேசுவதற்கு முன்பதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கின்ற சுமந்திரன் தமிழ் அரசியல் கைதிகள் அணைவரும் விடுதலை செய்யப்படவேண்டும் தமிழ் சிங்கள மக்களிடையே நல்லிணக்கம் கட்டி எழுப்பபடவேண்டும் அப்படியான கோரிக்கையினை முன்வைத்து பொதுமன்னிப்பு அணைவருக்கும் வழங்கி எனிமேல் எங்களகட்;டத்திலும் அப்படியான கைதிகள் புலணாய்வு துறையினராலோ பொலிஸாரினாலோ மீண்டும் கைது செய்யப்படாமல் இருக்கின்ற சூழ்நிலையினை உருவாக்கி அதற்கான ஜனாதிபதியி;டம் இருந்து பொதுமன்னிப்பு பெற்றுக்கொடுக்கவேண்டும். சுமந்திரன் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அணைவரும் தத்தமது தேவைக்காக அணைத்து அமைச்சர்களையும் ஜனாதிபதியினையும் பிரதமரையும் சந்தித்து தமது தேவைகளை நிவர்த்தி செய்கின்றார்கள். இன.று தமிழ்மக்கள் அப்பாவிகளாக அநாதவராக பிரபாரன் இல்லாத சூழ்நிலையில் வாழந்து கொண்டிருக்கின்ற இந்த மக்கள் அநாதரவாக தான் திரிகின்றனர். இவர்களின் பாதுகாப்பிணை உறுதிப்படுத்தி இவர்கள் நிம்மதியாக வாழுகின்ற சூழலை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால் தமிழ்  பாரளுமன்ற உறுப்பினர்கள் பொதுமன்னிப்பு பெற்றுக்கொடுத்து அவர்கள் அணைவரையும் விடுதலை செய்ய ஆவன செய்யவேண்டும். இந்த நடவடிக்கையினை சுமந்திரன் எடுக்க தவறுவராக இருந்தால் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக எமது கட்சி வடகிழக்கு மாகாணங்களை தவிர்ந்த தென்மாகாணம் மேல்மாகாணம், போன்றவற்றில் எமது சத்தியாக்கிர போராட்டங்களை, சிங்கள தமிழ் மக்கள் அணைவரையும் ஒன்று திரட்டி கரம் கோர்க்கும் போராட்டத்தினை அடக்குமுறை;கு எதிரான ஜனநாயக அமைப்பு மிகவிரைவில் முண்ணெடுக்கவுள்ளது.
ஆசிரியர் - Tamilan