டிஎன்பிஎல் எலிமினேட்டர் - காரைக்குடி காளையை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது லைகா கோவை கிங்ஸ்

டிஎன்பிஎல் எலிமினேட்டர் - காரைக்குடி காளையை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது லைகா கோவை கிங்ஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் எலிமினேட்டர் சுற்றில் காரைக்குடி காளையை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது லைகா கோவை கிங்ஸ்

டிஎன்பிஎல் எலிமினேட்டர் - காரைக்குடி காளையை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது லைகா கோவை கிங்ஸ்
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் எலிமினேட்டர் சுற்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. கோவை கிங்ஸ் அணிக்கெதிராக காரைக்குடி காளை டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

கோவை கிங்ஸ் அணியின் ஷாருக்கான், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஷாருக்கான 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அபிநவ் முகுந்த் 51 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேற கோவை கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. காரைக்குடி காளை அணியின் ராஜ்குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை களமிறங்கியது. கோவை கிங்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கி திணறியது.

அந்த அணியின் மான் பாவ்னா ஓரளவு தாக்குப்பிடித்து 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். கிஷன் குமார் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகி வெளியேறினர். இதனால் காரைக்குடி காளை 20 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கோவை கிங்ஸ் அணி சார்பில் நடராஜன் 4 விக்கெட்டும், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, நாளை நடைபெறும் இரண்டாவது சுற்றில் கோவை கிங்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றன.
ஆசிரியர் - Editor II