தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டியில் மலிங்காவிற்கு இடமில்லை

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டியில் மலிங்காவிற்கு இடமில்லை

யார்க்கர் மன்னன் என்று அழைக்கப்படும் மலிங்காவிற்கு தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டிக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை. 

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டியில் மலிங்காவிற்கு இடமில்லை
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா. யார்க்கர் மன்னன் என்று அழைக்கப்படும் இவருக்கு சமீப காலமாக டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு எதிரான டி20 போடடியில் விளையாடினார்.

கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 லீக் தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இதனால் இலங்கை தேசிய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் இலங்கை அணி அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.மலிங்காவிற்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான பினுரா பெர்னாண்டோவிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. இவர் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 2015-ல் இரண்டு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். அதன்பின் தற்போதுதான் அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஆசிரியர் - Editor II