டிஎன்பிஎல் 2018- மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ்

டிஎன்பிஎல் 2018- மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக் குவாலிபையர் 1-ல் மதுரை பாந்தர்ஸை 75 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.


தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர்-1 திண்டுக்கல்லில் நடைபெற்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிராக மதுரை பாந்தர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. ஹரி நிஷாந்த் 57 ரன்களும், என் ஜெகதீசன் 43 ரன்களும், ஆர் விவேக் 54 ரன்களும் சேர்த்தனர்.பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் களம் இறங்கியது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சால் மதுரை பாந்தர்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் 19.3 ஓவரில் 128 ரன்னில் சுருண்டது. இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆசிரியர் - Editor II